• Apr 27 2025

ஒரே நாளில் ரீரிலீஸ் ஆகவுள்ள பெரிய நடிகர்களின் படங்கள்..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான அஜித் ,விஜய் ,ரஜினி இவர்களின் படங்கள் வெளியாகும் போது தியேட்டர்கள் எல்லாம் திருவிழா போன்று இருக்கும் இந்த நிலையில் தற்போது இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரீரிலீஸ் ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயையும் ரஜினியையும் இரண்டு துருவத்தில் நிறுத்தி போட்டியாளர்களாக மாற்றவுள்ளனர்.


முதல் அறிவித்தது போன்று கலைப்புலி தாணு தயாரிப்பில் சச்சின் படத்தினை ரீரிலீஸ் செய்வதற்காக ஏப்ரல் 18 அன்று தேதி குறித்து இருந்தனர். தற்போது அதே நாளில் ரஜினி நடித்த தளபதி படத்தினை ரீரிலீஸ் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


விநியோகஸ்தர் யாகியா பாய் இந்த செய்தியை வெளியிட்டதும் அவுஸ்திரேலியாவில் 20 மற்றும் மலேசியாவில் 40 ஸ்கிரீன்கள் புக் ஆகியுள்ளன உலகம் முழுவதும் ஏறத்தாழ 300 தியேட்டர்களில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஏப்ரல் 18 ஆம் தேதி இருவரது ரசிகர்களும் முட்டி மோதுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement