• Apr 15 2026

"படையப்பா" படத்தை மிஸ் பண்ணது வருத்தம் தான்.. ஆனாலும், மீனா ஓபன்டாக்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான மீனா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகின்றன. குறிப்பாக, சூப்பர் ஹிட் படங்களான தேவர்மகன் மற்றும் படையப்பா ஆகியவற்றில் நடிக்க முடியாமல் போனது குறித்து அவர் வெளிப்படையாக பேசியது கவனம் ஈர்த்துள்ளது.


“தேவர் மகன், படையப்பா போன்ற படங்களின் வாய்ப்புக்களை இழந்தது வருத்தம் தான். ஆனா, கிடைச்சதை வைத்து கவலைப்படாமல் முத்து, அவ்வை சண்முகி போல கிடைச்ச வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கணும்கிற பாசிட்டிவ் எண்ணம் தான் என்னை வழி நடத்துது.” என்று மீனா மனம்திறந்து தெரிவித்துள்ளார்.

திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக விளங்கிய மீனா, தனது கரியரில் பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். இருந்தாலும், சில பெரிய வாய்ப்புகள் தன்னிடம் வந்து சேராமல் போனதை அவர் முதல் முறையாக இவ்வளவு நேர்மையாக பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement