• Jul 19 2025

ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மையூ... வெட்கமே இல்லாமல் கோபி செய்த காரியம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த ராதிகா கமலாவிடம் உன்னால தான் எல்லா பிரச்சனையும். நீதான் எல்லாத்துக்கும் காரணம். என்னையும் சேர்த்து பொய்காரி ஆகிட்டா என கண்டபடி திட்டுகிறார். அதன் பின்பு மையூவிடம் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று சத்தம் போடுகிறார்.

அதன்பின்பு கமலா மையூ தனியாக இருக்க, பாக்கியா அப்படி சொல்ல சொல்லி சொன்னாங்களா என்று கேட்கவும், இல்லை ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடல. அம்மா பூவாஷ் தடக்கி தான் கீழே விழுந்தார். இதுதான் உண்மை என்று ஆணித்தரமாக சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து ராதிகாவிடம் சென்று மையூ பேச, ராதிகா என்ன நடந்தது? எப்படி கோர்ட்டுக்கு வந்தா? என விசாரிக்கின்றார். அதற்கு தான் பார்க்கில் தனியாக இருக்கும் போது பாக்கியா வந்ததாகவும் அவர் அழுத காரணத்தினால் தான் உண்மையை  சொன்னதாகவும் சொல்லுகிறார்.


இதனால் நான் இந்த வீட்டுல இவ்வளவு நாளா அழுதேனே அப்போ உனக்கு சொல்ல தோணலையா? என மையூவுக்கு பேசுகிறார்.  ஆனாலும் இறுதியில் அவரை கட்டிப்பிடித்து அழுகின்றார்.

இன்னொரு பக்கம் கோபி பாரில் இருந்து குடித்துக் கொண்டு, ராதிகாவால தான் எல்லா பிரச்சனையும். அவள எப்ப கட்டினானோ அப்ப பிடிச்சது சனியன். அம்மாட முகத்தையும் பார்க்கவே முடியல என புலம்பிக் கொண்டிருக்கின்றார்.

இறுதியாக பாக்கியா வீட்டில் ஈஸ்வரி வந்ததற்காக விருந்து சமைத்து பரிமாற, கோபி அங்கு வெட்கமே இல்லாமல் வருகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement