பெரும் எதிர்பார்ப்புக்களுடன் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன், இசை மாயாஜால வித்தைக்காரர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணிரத்தினம் என ஒரு கனவுக் கூட்டணியாக உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவின் தரம் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, சென்னை சாயிராம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன், மணிரத்தினம், ரஹ்மான் மற்றும் மீடியா பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
விழாவில் மணிரத்தினம், தனது சினிமாப் பயணத்தின் சில முக்கியமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன்போது மணிரத்தினம் கூறியதாவது, “நான் நன்றி சொல்லணும்னா கே.பாலசந்தர் சாரில இருந்து ஆரம்பிக்கணும். அவர் தான் சினிமாவுக்கே என்னைக் கொண்டு வந்தார். இப்போ நம்ம சினிமாவில பாடலுக்கான சூழல் குறைவாகவே இருக்கு. கதையெல்லாம் டைரக்டர் பேசுற மாறியிருக்கு. அதை ரஹ்மான் சார்கிட்ட சொன்னேன். இது போல இருந்த 'தக் லைஃப்' படத்தில ஒரிஜினல்ல 5 பாடல்தான் இருந்தது. ஆனா என் பேச்சுக்குப் பிறகு அவர் அதை 9 பாடல்களாக மாற்றிவிட்டாரு.” என்றார்.
மணிரத்தினம் தனது சினிமா குறிக்கோள் தொடங்கிய தருணங்களைப் பகிர்ந்தபோது, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அவரை பார்த்தனர். நடிகர் கமல்ஹாசன், அவரது அண்ணன் சாருஹாசன், இயக்குநர் மகேந்திரன் போன்றவர்கள் அவருடைய பயணத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“கமல் சார் ஒரு ஆங்கில புத்தகத்தை கொடுத்து, திரைக்கதை எழுதச் சொன்னார். அதை மூணு நாளில முடிச்சேன். அந்தக் கதையை நான் பாரதிராஜா சார்கிட்ட சொன்னேன். ஆனா அவர் அதைக் கேட்டு, இன்னைக்கு வரைக்கும் என்ன கிண்டல் பண்ணுவாரு.” எனத் தெரிவித்தார் மணிரத்தினம்.
அத்துடன், “தயாரிப்பாளர்கள் 'உனக்கு எதுவும் தெரியாது, நாங்க சொல்றதை பண்ணனும் என்று தான் சொல்லுவாங்க. ஒவ்வொரு படத்தையும் போராட்டமா தான் பண்ணனும். ஆனா நாயகன் படத்துக்குப் பிறகு, 'நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். படத்தை நீங்களே பண்ணுங்கனு சொன்னாங்க. அது தான் எனக்கு முதல் சுதந்திரம்..!” என்று உணர்வுபூர்வமாக கதைத்திருந்தார். இந்த வார்த்தைகள் தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Listen News!