• Jun 14 2026

சோலோ ஹிட் அடிக்க காத்திருக்கும் மகாராஜா.. முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், வில்லனாகவும் திகழும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் தான் மகாராஜா. இதற்கு பல விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றார்கள்.

இந்த படத்தில், விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகனதாஸ், பாரதிராஜா, நட்டி நடராஜ், முனிஸ்காந்த், திவ்யபாரதி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மகாராஜா படத்திற்கு பத்திரிகை விமர்சனங்களை தாண்டி ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன், வலைப்பேச்சு உள்ளிட்ட பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து ரசிகர்களை டிக்கெட் எடுக்க வைத்துள்ளார்கள்.


இந்த ஆண்டு வெளியான படங்களில் அரண்மனை 4, கருடன் படங்களைத் தொடர்ந்து மகாராஜா திரைப்படமும் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக அளவில் சுமார் 2000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியான மகாராஜா திரைப்படம், எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் போன்ற நான்கு நாட்களிலும் பாக்ஸ் ஆபீஸில் செல்வமழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், மகாராஜாவின் முதல் நாள் வசூல் மட்டுமே ஐந்து முதல் ஏழு கோடி வரை வரும் என கூறப்படுகிறது. இந்த வாரம் மகாராஜா சோலோ ஹிட் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement