• Jul 13 2025

ரஜினி ரசிகர்களால் டென்ஷனில் லோகேஷ் கனகராஜ்..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் "கூலி " படத்தில் ரஜினியுடன் இணைந்து சுருதிகாசன் ,நாகார்ஜுனா , அமீர்கான் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாகார்ஜுனா மற்றும் அமீர்கான் "கூலி " படம் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இவர்கள்  'கூலி' குறித்து பேசிய பேட்டிகள் இப்படத்தின் ஹைப்பை மேலும் உயர்த்தி இருக்கின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் சினிமா பாக்ஸ் ஆபிஸிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


லியோ படத்திற்கு பின்னரான முயற்சி என்பதால் இந்த முறை எந்த தவறும் நடக்க கூடாது என லோகேஷ் மிகுந்த கவனத்துடன் படத்தை வடிவமைத்து வருகிறார். இதைவிட ஹைபை மேயின்டெயின் செய்யவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சந்திக்கவும் அவர் சிரமப்பட்டு வேலை செய்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

Advertisement

Advertisement