• May 16 2026

தமிழ் சினிமாவில் கென் கருணாஸின் புதிய சாதனையை வியந்து பாராட்டிய முன்னணி நடிகர்கள்...

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘யூத்’ திரைப்படம் வெற்றிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்த இந்த படம் இளம் தலைமுறையை கவரும் விதமாக உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 


பள்ளி மாணவனாக இருக்கும் நாயகன் காதலை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழ்க்கையை நடத்தி, படிப்பிலும் பள்ளியிலும் பின்தங்கிய மாணவனாக மாறுகிறார். பின்னர் பெற்றோரின் தியாகத்தையும் கஷ்டத்தையும் உணர்ந்து, தனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் கதை இந்தப் படத்தின் மையமாக அமைந்துள்ளது.

நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்து உருவாகியுள்ள இந்த படம் குடும்ப ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்களிடம் படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதுவரை ‘யூத்’ திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது, இது படக்குழுவிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


இந்த நிலையில், முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளனர். இவர்களின் பாராட்டு, படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் சிம்பு கூட இந்த படத்தை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement