• Aug 29 2025

"மொழி என்பது மனங்களை இணைக்கும் பாலம்"....! நடிகர் மாதவன் நேர்காணல்..!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர். மாதவன். பல மொழிகளில் நடித்துவரும் இவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தனது தனித்திறமையால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.


சமீபத்தில், மொழிப் பிரச்சனை குறித்து எழுந்த விவாதங்களைப் பொறுத்த வரை, நடிகர் மாதவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். “பல மொழிகளை அறிந்து கொள்வது என் வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளது. நான் தமிழ் பேசுவேன், இந்தி பேசுவேன், கோலாப்பூரில் படித்ததனால் மராத்தியும் கற்றுக்கொண்டேன்” என தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது“மொழி தொடர்பான எந்தவித பிரச்சனையும் எனக்கு ஏற்பட்டதில்லை. மொழி என்பது மனங்களை இணைக்கும் ஒரு பாலமாகும். நாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள உதவும் கருவி. எனவே, அதை வீணாக்கக்கூடாது. பல மொழிகளை அறிந்து கொள்வது, வாழ்க்கையின் பல துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்கும்.”


இந்த நேர்வழி விளக்கம் தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பன்மொழி திறமை கொண்ட ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூக நலனைக் கருதி பேசும் பிரபலமாகவும் மாதவன் தன்னை நிரூபித்துள்ளார்.

Advertisement

Advertisement