• May 16 2026

கிருத்திகா உதயநிதியின் ஒற்றைப் பதிவால் திணறும் இணையம்.! இது தளபதிக்கான மறைமுக பதிலடியா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் கிருத்திகா உதயநிதி தற்பொழுது பதிவிட்ட மறைமுக ட்வீட் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ஒரு ‘செலிபிரிட்டி’ என்றால் யார்?' எனக் கேள்வி எழுப்பிய இந்த ட்வீட்டில், கிருத்திகா தனிப்பட்ட கருத்தை பகிர்ந்துள்ளாரோ? அல்லது ட்ரோல் செய்கிறாரோ? என்று எக்ஸ் தளத்தில் பரபரப்பான விவாதங்கள் கிளம்பியுள்ளன.


அதாவது,  “நீங்களும், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதும் சேர்ந்து தான் பிரபலம் என்ற அந்தஸ்தை கொடுக்கிறது. ஆனால் எப்போது நீங்கள், ‘மக்கள் என்னை எப்படி பார்க்கிறதோ அதுதான் நான்’ என நினைக்க தொடங்கி, உங்கள் சுயத்தை கைவிடுகிறீர்கள், அப்போது நீங்கள் பெரும் பிரச்னையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். " எனக் கூறியுள்ளார். 

இந்த கருத்து பலரால் விமர்சிக்கப்பட்டு, சமீப காலமாக நடிகர் விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவிய ட்ரோல்களுக்கு எதிரான பதிலடியா? அல்லது மறைமுக ஆதரவா? என கருத்துக்கள் பரவி வருகின்றன. நெட்டிசன்களின் ஒரு பகுதி, இது விஜய்க்கு ஆதரவாக சொல்லப்பட்ட கருத்து என கருதி உள்ளனர், அதே நேரத்தில் மற்றொரு பகுதி இதனை, கிருத்திகா அவரை மறைமுகமாக கலாய்த்து ட்ரோல் செய்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, கிருத்திகா உதயநிதி யாரையும் குறிப்பிட்டு இந்த பதிவினை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement