தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவராக மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கிரண் ரதோட். “ஜெமினி”, “வின்னர்”, “அன்பே சிவம்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருக்கும் கிரண், தற்போது ஓர் அதிர்ச்சி மற்றும் வலிக்கத்தக்க பிரச்சனையை எதிர்கொள்கின்றார். சமீபத்தில், அவரது மார்ஃபிங் செய்யப்பட்ட போலியான ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது. இதனை தாங்க முடியாமல், கிரண் சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.
மார்ஃபிங் என்பது, ஒருவரது முகத்தை வேறு ஒருவர் மீது கலைநுட்பம் மூலம் பதித்து, அந்த நபர் செய்தது போலவே ஒரு காட்சியை உருவாக்கும் முறை. தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரில் இந்த 'மார்ஃபிங்' இன்று பலரது வாழ்க்கையையே சிதைக்கும் அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த முறையை பயன்படுத்தி நடிகை கிரணை மிக மோசமான முறையில் தற்பொழுது காணொளி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவால் கிரண் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் கூறியுள்ளார். கிரண் புகார் அளிக்கச் சென்றபோது, "நான் சமீபத்தில் எந்த ஒரு திரைப்பட வாய்ப்பையும் பெறவில்லை. ஆனால் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக சமூக வலைத்தளங்களில் என்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றேன். அதைத் தான் சிலர் தவறாகப் பயன்படுத்தி, மார்ஃபிங் தொழில்நுட்பம் மூலம் எனது முகத்தை வைத்து ஆபாசக் காணொளியினை உருவாக்கியுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதனுடன், “இது என் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருப்பதுடன், நம் சமூகத்தில் ஒரு பெண் எப்படி மோசமான முறையில் தாக்கப்படுகிறாள் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகவும் காணப்படுகின்றது.” என்றும் கூறியுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, மார்ஃபிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கிரண் வலியுறுத்தியுள்ளார். நடிகை கிரணின் இந்தப் போராட்டம், ஒரு தனி நபருக்கானதாக இல்லாது. இதுபோன்ற போலி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பெண்கள், பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்களைக் குறிவைக்கின்ற சமூக நோய்க்கு எதிரான குரலாக அமைந்துள்ளது.
Listen News!