• Jun 14 2026

கருணாஸின் சட்டையில்லா செல்பி… யூத் வெற்றி விருந்தில் கிளம்பிய சர்ச்சை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அசுரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்றவர் கென் கருணாஸ். சமீபத்தில் இவர் நடித்த ‘யூத்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் டீன் ஏஜ் பருவ இளைஞர்களின் வாழ்க்கை, காதல், நட்பு மற்றும் உணர்ச்சி போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் உள்ள இளைஞர்களின் மனநிலை, அவர்களின் குழப்பங்கள் மற்றும் உறவுகள் இந்த படத்தின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.

இந்த படத்தில் கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இளம் தலைமுறையினருக்கு தொடர்புடைய கதையாக அமைந்ததால் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ‘யூத்’ திரைப்படம் பெற்ற வரவேற்பை தொடர்ந்து, கென் கருணாஸ் தனது படக்குழு நண்பர்களை வீட்டிற்கு அழைத்து சிறப்பு விருந்து ஏற்பாடு செய்துள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ்  தளத்தில் பகிர்ந்துள்ளார் கருணாஸ்.

அந்த பதிவில் அவர், “பகுத்துண்டு பல்லுயிர் Ken & gang” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில்,  கருணாஸ் சட்டை இல்லாமல் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டதும் சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன. சிலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், மற்றவர்கள் அந்த பதிவின் அவசியம் குறித்து விவாதித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement