• Jul 14 2025

பிக் நிற சேலையில் பார்வைகளை திருப்பிய கல்யாணி பிரியதர்ஷன்...!வைரலாகும் கிளாமர் க்ளிக்ஸ்..!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன். 2017-ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "ஹலோ" மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமான இவர், பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்சி தம்பதிகளின் மகளாவார்.


அண்மையில் கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புதிய புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பிக் நிறத் தோற்றமளிக்கும் அழகிய சேலையில் ஒளிரும் கல்யாணியின் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. அவரது எளிமையான அலங்காரம் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றம், நவீன யூத் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தனது சினிமா பயணத்தை சித்ரலஹரி, ரணரங்கள், மாநாடு, புத்தம் புதுக் காலை போன்ற வெற்றிப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.  கல்யாணி, தமிழில் முதன்முறையாக ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில்  பிஸியாக  நடித்து வருகின்றார்.


இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதுடன், தனது அழகான புகைப்படங்கள் மற்றும் நேர்மையான பதிவுகள் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்திய இந்த சேலை புகைப்படம் கல்யாணியின் ஸ்டைல் சென்ஸ் மற்றும் கவர்ச்சியான பார்வை மூலம் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகின்றார்.






Advertisement

Advertisement