• Apr 15 2026

அமர்க்களமாக நடந்து முடிந்த ஜூலியின் திருமணம்... குவிந்த பிரபலங்கள்.! வைரலான வீடியோ

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி உலகில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ஜூலி. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே பெரும் விவாதங்களை ஏற்படுத்திய ஜூலி, நிகழ்ச்சிக்குப் பிறகும் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்தார்.

அந்த வகையில், தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான தருணம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் ஜூலி, முகமது ஐக்ரீம் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமண பந்தத்தில் நேற்றைய தினம் இணைந்துள்ளனர்.


ஜூலி தனது காதல் குறித்து சில மாதங்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். இந்த காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, ஜூலிக்கு ஆதரவாகவும், வாழ்த்துகளோடும் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு, ஜூலி – முகமது ஐக்ரீம் ஜோடியின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாகவும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, “ஜூலிக்கு இது புதிய தொடக்கம்” என்ற கருத்துகள் பரவின.


நிச்சயதார்த்தத்துக்குப் பிறகு, ஜனவரி 16ஆம் தேதி திருமணம் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று சென்னையில் கோலாகலமாக ஜூலி – முகமது ஐக்ரீம் அவர்களின் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் திரையுலக மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியுடன் பயணித்த சக நண்பர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரத்தினர் இந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement