• Aug 08 2025

பிறந்தநாளில் ஜுலி வெளியிட்ட வீடியோ வைரல்.. ஆளே மாறிட்டாரே..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அடைந்த மக்கள் கவனத்தை ரியாலிட்டி ஷோவில் தக்கவைத்துக் கொண்டாலும் நிகழ்ச்சியின் முடிவில் அவர் கடுமையான விமர்சனங்கள் எதிர்கொண்டார்.


வெளியே வந்த பிறகு நிகழ்ச்சியில் நடந்த விஷயங்களுக்கு மன்னிப்பும் கேட்டார்.பின்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்று மக்களின் பார்வையை மாற்ற முயற்சி செய்தார். அதையடுத்து தொகுப்பாளராக, புகைப்படக்கலைஞராக, வெளிநாடுகளில் சுற்றி திரிந்து பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில் தனது பிறந்த நாளை நண்பர்கள் நடுவில் கோலாகலமாகக் கொண்டாடிய ஜுலி அந்த நேரத்தில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஜுலியின் லுக் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. "ஜுலியா இது? ஆளே மாறிட்டாரே!" என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அவரது பிறந்த நாள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement