• May 15 2026

பிறந்தநாளில் 3500 படிகள் ஏறி ஏழுமலையான் தரிசனம் செய்த ஜான்வி கபூர்… வைரலாகும் வீடியோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக திகழ்ந்து வரும் ஜான்வி கபூர் இன்று (மார்ச் 6) தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபல நடிகையும் மறைந்த தமிழ்–ஹிந்தி நடிகையுமான ஸ்ரீதேவி அவர்களின் மகளான ஜான்வி கபூர், தனது பிறந்தநாளை மிகவும் ஆன்மிகமான முறையில் கொண்டாடியுள்ளார்.

அதன்படி, அவர் இன்று அதிகாலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.


அதன்போது, நடிகை ஜான்வி கபூர் சுமார் 3500 படிகள் கொண்ட பாதையை நடைபயணமாக ஏறிச் சென்று ஏழுமலையான் சாமியை தரிசனம் செய்துள்ளார். இது அவரது பக்தி மற்றும் ஆன்மிக நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement