• May 16 2026

விஜய்யின் கேரவன் மதிப்பு இத்தனை கோடியா.? அதிரடியாக வெளியான தகவல்!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார். எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியுள்ளார். இது அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், சினிமா துறையிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தபோதும், அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அரசியலுக்குள் நுழைந்துள்ளார் விஜய். அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனாலும் அவருக்கு எதிராக பல்வேறு சதிகளும் பிரச்சினைகளும் எழுந்தபோதும், அத்தனையையும் தாண்டி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மும்முரமாகச் செயல்பட்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார் விஜய். குறிப்பிட்ட இடங்களில் தனது பிரச்சாரப் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில், விஜய் தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கேரவன் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய்யின் பிரச்சாரக் கேரவன் அவர் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளது. அந்தக் கேரவனின் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், கேரவனுடன் சேர்த்து விஜய்யின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடி என்று பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த இந்த தகவல் ரசிகர்களிடையேயும் அரசியல் வட்டாரங்களிலும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement