• Apr 15 2026

விஜயாவின் கனவு தகர்கிறதா.? எங்கேஜ்மென்ட் நடக்கும் இறுதி நேரத்தில் மனோஜ் கொடுத்த அதிர்ச்சி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், நீதிமன்றத்திற்கு வரும் ரோகிணி தன்னுடைய மகனையும் அழைத்து வருகிறார். அங்கு "எனக்கு வாழ்வாதார உதவி இல்லை, மனோஜுக்காக நிறைய கடன் வாங்கியிருக்கிறேன், அதனை என்னால் கட்ட முடியாது. மனோஜ் இல்லாமல் வாழ முடியாது. அவருடன் இணைந்து வாழவில்லை என்றால் நானும் என்னுடைய மகனும் இருக்க மாட்டோம்" என்று பேசுகிறார்.

இதனால் நீதிமன்றத்தில் மனோஜுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. ரோகிணிக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என்றும், ஆறு மாதங்களுக்கு இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 

இதைக் கேட்ட விஜயா அதிர்ச்சியடைகிறார். பின்பு "உனக்கு எங்கேஜ்மென்ட் நடக்க வேண்டும் என்றால் இங்கு நடந்தவற்றை வீட்டில் சொல்லக்கூடாது" என்று மனோஜிடம் விஜயா சொல்கிறார்.


இன்னொரு பக்கம் மனோஜின் எங்கேஜ்மென்ட் நடக்கிருப்பதால் எல்லோரும் தயாராகின்றனர். அந்த நேரத்தில் ஸ்ருதி அங்கு வருகிறார். மீனாவும் முத்துவும் செய்த உதவியால் தான் மீண்டும் ரவியுடன் இணைந்துவிட்டதாக கூறுகிறார். பின்பு ஸ்வேதாவும் அங்கு வந்துவிடுகிறார்.

எல்லோரும் தயாராகியிருக்கும் நேரத்தில், மனோஜ் தன்னுடைய எங்கேஜ்மென்ட் மோதிரம் காணவில்லை என்று தேடுகிறார். பெண் வீட்டினர் வரும் நேரத்தில் இப்படி நடந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாகக் காணப்படுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement