தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளுக்காக பெயர் பெற்ற வனிதா விஜயகுமார், சமீபத்தில் வெளியாகவுள்ள ‘Mrs & Mr Movie’ ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்டு, தனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பவங்களை மிக உணர்ச்சியோடு பகிர்ந்திருந்தார். அந்நிகழ்வில், வனிதா கூறியவை இப்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை உலுக்கியுள்ளது.
தனது பெயர் குறித்து ஆரம்பித்த வனிதா, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைப் பார்த்து,“என்னுடைய பெயர் எப்பவுமே வனிதா விஜயகுமார் தான்… அதை இன்னும் மாத்தவே இல்ல. அது ஏன் என்று எனக்கே தெரியல...” என உருக்கமான குரலில் கூறினார்.
அடுத்து மிகுந்த துயரத்துடன் வனிதா சில வார்த்தைகளைப் பகிர்ந்தார். அதன்போது அவர் கூறியதாவது, “என் மகன் ஸ்ரீகரி பிறந்த பிறகு, எனக்கும் கணவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம்...அந்த சூழலில் என்னுடைய வயிற்றில் குழந்தையும் இருந்தது.” என்றார்.
மேலும் “அத்தகைய சூழலில் எனக்கு துணையாக இருந்தது என் அப்பா தான். அவர் இல்லையென்றால் எதுவுமே நடந்திருக்காது. என் வாழ்க்கையை நான் எப்படி சமாளிக்க முடிந்ததுன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு...அதுக்கெல்லாம் காரணம் என்னுடைய அப்பா தான். என்னுடைய குழந்தை நலமாக பிறக்க காரணமும் அவர் தான். அதனால் தான் ஜோவிகாவின் பெயருக்குப் பின்னால் விஜயகுமார் என்று வருகிறது. " என்று கண் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.
அத்துடன் வனிதா தனது மகளாகிய ஜோவிகா பற்றியும் அந்நிகழ்வில் பேசியிருந்தார். “ஜோவிகா இப்போது இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். அந்த வாய்ப்புக்கள் அவளுடைய தைரியம் மற்றும் செயல்திறனை நிரூபிக்கக் கூடியவை. மக்கள் அவளை ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் எனக்கு 100% நம்பிக்கை உள்ளது...” என உறுதியுடன் கூறினார்.
வனிதா விஜயகுமார் ஒரு நடிகை என்பதைக் கடந்து, ஒரு தாயின் மன உணர்வுகளையும், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையையும் இந்த உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!