• May 15 2026

ஸ்வேதா மோகனுக்கே இந்த நிலைமையா? - ஸ்டூடியோவில் நடந்த பகீர் சம்பவம்!

shali / 1 week ago

Advertisement

Listen News!

ஸ்வேதா மோகன் திரையுலகில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறார். பிரபல பாடகி சுஜாதா மோகன் அவர்களின் மகளான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தனது இனிமையான குரல், உணர்ச்சி பூர்வமான பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.


இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகியாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “ஒரு பாடலை பதிவு செய்வது என்பது சாதாரண வேலை அல்ல; அது மிகவும் உணர்ச்சிபூர்வமான தருணம்.

அந்த பாடலை பாடிய பிறகு அது எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். ஆனால் சில நேரங்களில், நாம் பாடிய பாடல் வெளியான போது வேறு ஒருவரின் குரலில் கேட்கும் நிலை ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த தருணத்தில் ஏற்படும் ஏமாற்றத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. இது எனக்கு மட்டும் அல்ல, பல பாடகர்களுக்கும் நடந்திருக்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார். பாடகர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது.


Advertisement

Advertisement