• May 18 2026

தனுஷை மிஞ்சிய சிறந்த நடிகர் இவரா? ரசிகர்களை குழப்பிய இயக்குநர் மிஷ்கின்.! முழுவிபரம் இதோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மனித உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்கள் குறைந்து வரும் சூழலில், தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் “ஹபீபி”. இயக்குனர் மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்தப் படம், அன்பு, தியாகம் மற்றும் குடும்ப பாசத்தின் ஆழத்தை பேசும் கவித்துவமான காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அப்போது பேசிய அவர், “மொபைல் போன்கள் மனிதர்களுக்கிடையேயான நேசத்தை மெதுவாக அழித்து வரும் காலத்தில், அன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்றுத் தரும் படம் தான் ஹபீபி. இந்தப் படத்தை பார்த்த போது நான் மூன்று முறை அழுதேன். 

18 வயது இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.” என உணர்ச்சிபூர்வமாக கூறினார். மேலும், நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா இப்படத்தில் நடித்த விதம் குறித்து பாராட்டிய அவர், “தனுஷை விட 100 மடங்கு சிறப்பாக நடித்துள்ளார்.” என தெரிவித்தார்.

நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பல புதிய முகங்கள் நடித்துள்ள “ஹபீபி” திரைப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


Advertisement

Advertisement