• May 15 2026

நடிகர் சிவகுமாரின் இளமையின் ரகசியம் எம்ஜி ஆரின் சாபமா.? அவரே கொடுத்த வைரல் பேட்டி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி மூத்த நடிகர் சிவகுமார் சமீபத்தில் சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீண்ட காலமாக திரையுலகில் பணியாற்றி வரும் அவர், தனது சினிமா அனுபவங்களையும், மறைந்த நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுடன் சம்பந்தப்பட்ட ஒரு நினைவையும் பகிர்ந்துள்ளார்.

1979ஆம் ஆண்டு தனது 100வது பட விழாவில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த சிவகுமார், “முருகன் இளமையையும் அழகையும் வர்ணித்து.. நீ வாழ்நாள் முழுவதும் இளமையாக இருப்பாய் என்று எம்.ஜி.ஆர் கூறினார். அந்த மாதிரி என்னை சாபமிட்டார்” என்று நகைச்சுவையாக தெரிவித்தார். அந்த ‘சாபம்’ இன்னும் உண்மையாகவே இருக்கிறது எனவும் அவர் கூறியதில் ரசிகர்கள் கைகொட்டி பாராட்டினர்.


மேலும் தனது உடல்நிலை மற்றும் வயதைப் பற்றி பேசும்போது, “இப்போது எனக்கு 85 வயது ஆகிறது. ஆனால் அப்படி தோன்றுகிறதா?” என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டினர்.

சிவகுமார் ஒழுங்கான வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக அறியப்படுகிறார். யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் தான் இன்றும் இளமையான தோற்றத்துடன் காணப்படுகிறார் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

சினிமாவைத் தாண்டியும், ஆன்மீக உரைகள் மற்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பேச்சுகளால் அவர் தனி மரியாதையை பெற்றுள்ளார். எளிமையான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றை அவர் அடிக்கடி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement