• Apr 17 2026

முத்துனா சும்மாவா.? தெறித்து ஓடிய கடத்தல்காரர்கள்.! க்ரிஷின் நிலை என்ன?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மாடிக்குச் சென்ற ரோகிணி  பிஏ பற்றிய விஷயத்தையும், அவர் தான் க்ரிஷை கடத்தியதாகவும் சொல்லுகின்றார். இதனால் இப்பொழுதே இந்த விஷயத்தை வீட்டில்  சொல்லுமாறு மீனா சொல்ல,  இப்ப எப்படி சொல்லுவது, என்னை  வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள் என்று அழுகின்றார் ரோகிணி. 

இதனால் தான் சொன்னபடி செய்யுமாறு மீனா ஐடியா கொடுக்கின்றார். அதன்படியே ரோகிணியும் பிஏக்கு கால் பண்ணி மனோஜூக்கு  க்ரிஷை கடத்திய விடயத்தை போன் பண்ணி சொல்லுமாறும், நீ பெரிய கோடீஸ்வரன் என்று கதைக்குமாறு சொல்லுகின்றார். 


அதன்படி பிஏ மனோஜ்க்கு  கால் பண்ணி, க்ரிஷை  கடத்திய விடயத்தையும்,  தனக்கு 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும்  கூறுகின்றார். இதனை வீட்டில் உள்ள எல்லாருமும் கேட்கின்றார்கள். 

அதன் பின்பு முத்து தான் சொன்னபடி செய்யுமாறு மனோஜ்க்கு சொல்லுகின்றார். அவரும் பிஏ சொன்ன  அந்த இடத்திற்கு செல்ல, பணத்தை எடுக்க வந்தவர்களை  முத்து வெளுத்து வாங்குகின்றார். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement