• May 15 2026

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கிறாரா மீனா? இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை மீனா, தமிழ் சினிமாவின் 90களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார். 


தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்த அவர், தனது திறமையால் டாப் ஹீரோயினாக நீண்ட காலம் நிலைத்திருந்தார்.

இன்றும் சினிமாவில் தனது இடத்தை உறுதியாக வைத்திருக்கும் மீனா, தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, சுற்றுலா பயணங்கள், புகைப்பட ஷூட்கள், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருத்தல் போன்றவற்றாலும் ஆக்டிவாக உள்ளார்.


சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த படங்களில், அவர் மிகுந்த எளிமையுடன் அதே சமயம் மிக அழகாகவும் காட்சியளிக்கிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக இன்னும் தனது கவர்ச்சியையும், ஸ்டைலையும் தக்கவைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகின்றன. வயது என்பது ஒரு எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் மீனா.


Advertisement

Advertisement