• Jun 14 2026

கல்யாண வாழ்க்கை இவ்வளவு சிக்கலா? ஆர்.ஜே.விஜய்யின் "வைஃப்" படத்தின் எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்

shali / 2 months ago

Advertisement

Listen News!

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் S. அம்பேத்குமார் முன்னிலையில், ஹேமநாதன் R இயக்கத்தில் உருவாகி வரும் “வைஃப்” திரைப்படம், இன்றைய நவீன கால திருமண வாழ்க்கையின் நுணுக்கங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான படைப்பாகும். 


இதில் RJ விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமகால தம்பதியரின் உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உறவின் சிக்கல்களை உண்மையோடு வெளிப்படுத்தும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “நீ சாரல்” சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மென்மையான மெலடி இசையில் உருவான இந்த பாடலை ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். 

அவருடன் சுபலக்‌ஷினி இணைந்து இனிமையாக பாடியுள்ள இந்த பாடல், காதலின் நெகிழ்ச்சியையும் அமைதியையும் அழகாக எடுத்துக்காட்டுகிறது. பாடல் வரிகளை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூடியூபில் இந்த பாடல் பெற்றிருக்கும் வரவேற்பு, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement