• Apr 17 2026

சமூக நீதி பேசும் சினிமாவா? ‘மை லார்ட்’ ட்விட்டர் விமர்சனங்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மை லார்ட்’ திரைப்படம், ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடும் இந்த படம், பிப்ரவரி 13ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், மை லார்ட் படத்தின் சிறப்புக் காட்சிக்குப் பிறகு ட்விட்டரில் விமர்சனங்கள் குவியத் தொடங்கியுள்ளன. அதன்படி படத்தை பார்த்தவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.

ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி போன்ற படங்களின் மூலம் சமூகத்தின் அடிப்படை பிரச்சினைகளை திரையில் பேசிய ராஜு முருகன், இந்த படத்திலும் நீதிமன்ற அமைப்பு, சட்டத்தின் மனிதநேய முகம் மற்றும் சாமானியர்களின் வாழ்க்கை போராட்டத்தை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.


சசிகுமாரின் இயல்பான நடிப்பு, குரு சோமசுந்தரத்தின் கேரக்டர் தேர்வு, ஷான் ரோல்டனின் பின்னணி இசை ஆகியவை படத்தின் முக்கிய பலமாக ட்விட்டர் விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

குறிப்பாக, “வணிக சினிமாவைத் தாண்டி சிந்திக்க வைக்கும் படம்” என்ற கருத்துகள் அதிகமாக பகிரப்படுகின்றன. மேலும் #MyLordMovie, #Rajumurugan, #SocialCinema போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. 

அத்துடன் "#mylord #மைலார்ட் 3.5/5. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கொள்கையில் வலுவான கதை. அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் பேமிலி வரிசையில் சசிகுமார் நடித்த தரமான படம். இயக்குனர் ராஜூமுருகன் டச்.கிளைமாக்ஸ் பிரமாதம். ஹீரோயின் சைத் ரா நடிப்பு, ஷான் இசை சிறப்பு" என பத்திரிகையாளர் மீனாட்சி சுந்தரம் தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.

அதே நேரத்தில், சிலர் படத்தின் மெதுவான திரைக்கதை அனைவருக்கும் பிடிக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். இருப்பினும், மொத்தமாக பார்க்கும்போது ‘மை லார்ட்’ திரைப்படம் சமூக கருத்து கொண்ட படங்களை விரும்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக ட்விட்டர் விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றன.


Advertisement

Advertisement