• Apr 22 2026

பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்தின் திருமண வாழ்க்கை சிதறுகிறதா.? அதிர்ச்சி தகவல்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சர்வானந்த், தமிழிலும் தனக்கென ஒரு இடம் பிடித்தவர். தமிழில் இவர் நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படம் மெகா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது.

மேலேயும், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு இணையான தரத்தில் நடித்து பாராட்டு பெற்றார். 

சமீபத்தில் பைக்கர் படத்தில் உடல் எடையை கணிசமாக குறைத்து தோன்றி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், சர்வானந்த்தின் திருமண வாழ்க்கை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது பரவி வருகின்றன. 

2023ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்ற வழக்கறிஞரின் மகளான ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகளும் பிறந்தாள். 


ஆனால் திருமணமாகி மூன்று ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் இருவரும் விவாகரத்து நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டே இது தொடர்பான பேச்சுக்கள் எழுந்தபோது இருவரும் உறுதியாக மறுத்திருந்தனர். எனினும் தற்போது சர்வானந்த் தன் இன்ஸ்டாகிராமில் இருந்து மனைவியுடனான புகைப்படங்களை நீக்கியதாக கூறப்படுவது விவாகரத்து தகவல்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

எனினும், இதுவரை இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement