தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகராகவும் பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் பன்முகம் கொண்டு விளங்குகிறார் விஜய் ஆண்டனி. தற்போது இவரது நடிப்பில் நூறு சாமி திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பொதுவாக அரசியல், சாதி, பண பாகுபாடு மற்றும் மனிதர்களுக்கிடையிலான பிரிவினைகளைப் பற்றி எடுத்துக் கூறும் கதைக் களத்துடன் காணப்படும். அதிலும் தாய் மகன் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் தயாராகியுள்ள படம்தான் நூறு சாமி. இந்தப் படத்தில் சுவாசிக்கா, கருணாஸ், லிஜோமோல் ஜோஸ் மற்றும் சின்னத்திரை நடிகை தாமரைச்செல்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகியது. அந்த டீசரின் முதல் காட்சியிலிருந்தே பதறவைக்கும் வகையில் விறுவிறுப்பாகக் காணப்பட்டது. சாதி மோதல், அடித்தடி என அடுத்தடுத்த காட்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. இந்தப் படம் மே மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நூறு சாமி படத்தின் படப்பிடிப்பின்போது சின்னத்திரை நடிகை தாமரைச்செல்வி படப்பிடிப்பு இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் விஜய் ஆண்டனியுடனும் நடிகை சுவாசிக்காவுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!