• Apr 26 2025

மணிகண்டனைப் புகழ்ந்து தள்ளிய சான்வி மேக்னா..!யாரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

சினிமா உலகில் நல்ல கதைகள் மற்றும் இயல்பான நடிப்புக்கள் எப்பொழுதும் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிடுகின்றன. கடந்த ஜனவரி 24ம் திகதி வெளியான 'குடும்பஸ்தன்' படமும் இதற்கு விதிவிலக்கல்ல. மணிகண்டன் மற்றும் சான்வி மேக்னா நடித்த இத்திரைப்படம், ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புகழைப் பெற்ற 'குடும்பஸ்தன்' படம் மணிகண்டனின் நடிப்புப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக காணப்பட்டது.


'குடும்பஸ்தன்' படத்தை "சினிமாக்காரன்" நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் அறிமுகமான இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு உருவாக்கிய இவரது கதை பலராலும் பாராட்டப்பட்டது.

இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்தவர் சான்வி மேக்னா. இளம் வயதிலிருந்தே சினிமாவை நேசித்து வந்த சான்வி, 'குடும்பஸ்தன்' மூலம் ரசிகர்களின் மனங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் இயற்கை அழகு என்பன மூலம் இப்படத்தின் ஒரு முக்கிய ஆதாரமாக திகழ்ந்துள்ளார்.


இந்நிலையில், 'குடும்பஸ்தன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சான்வி மேக்னா, தனது சமூக ஊடகப் பக்கத்தில் நடிகர் மணிகண்டனைப் பற்றி உருக்கமான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், அவர் கூறியதாவது, "உங்களைப் போல திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம். 'குடும்பஸ்தன்' படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமன்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கின்றார்." எனக் கூறியுள்ளார்.

சான்வியின் இந்த உருக்கமான வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் சான்வியின் பதிவு வைரலாக பரவி, இருவரின் நட்பையும் படப்பிடிப்பு நேரங்களிலிருந்த அனுபவத்தையும் புகழ்ந்து பேச ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement