• Apr 15 2026

இளையராஜாவின் பயோபிக் திரைப்படம்.. தனுஷின் முக்கிய அறிவிப்பு..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ராயன் படத்தை இயக்கி முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இப்படத்தில்,ராஷ்மிகா, நாகர்ஜுனா ஆகிய முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது தனுஷின் அடுத்த படத்தின் அப்டேட் நாளை மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜாவின் சுயசரிதை ஏற்று படத்தில் நடிக்கும் தனுஷ், அதற்கான அப்டேட் ஒன்றை நாளை வெளி இடுவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.


இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை படமாக உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இந்த படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.


இவ்வாறான நிலையில், இப்படம் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என தனுஷ் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, இதில் நடிக்க உள்ள ஏனைய நடிகர்களின் விபரம் நாளை வெளியாகலாம்  எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement