• Apr 17 2026

பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்.! அதர்வாவின் ‘வலை’ டீசர் வெளியீடு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீவா சங்கர் இயக்கத்தில், நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வலை’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

வலை படத்தின் டீசரில், 'பழி வாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்… ஒன்று உங்க எதிரிக்கு, மற்றொன்று உங்களுக்கு'என்ற ஒரே வசனம் இடம்பெற்றுள்ளது. 

இந்த வசனம் படத்தின் கதையின் தீவிரத்தையும், அதர்வாவின் கதாபாத்திரத்தின் மனநிலையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த டீசர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதர்வாவின் மாறுபட்ட கதாபாத்திரம் மற்றும் படத்தின் டார்க் டோன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Advertisement