• May 15 2026

அம்மா சமையல் வேணும்னா நீயே செஞ்சுக்கோ.. கணவன்மார்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ஸ்ருதி

shali / 1 week ago

Advertisement

Listen News!

ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒரு வீடியோ குறித்து அவர் பகிர்ந்த இந்த கருத்து, பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.


அந்த வீடியோவில், ஒரு கணவன் தனது மனைவி தன் அம்மா மாதிரி சமைக்கவில்லை என்று வருத்தப்படுவதாக இருந்தது. இது குறித்து ஸ்ருதி ஹாசன் தனது கருத்தை வெளிப்படுத்திய போது, மிகவும் நேர்மையான மற்றும் நகைச்சுவை கலந்த பதிலை அளித்தார்.

அதாவது, “உன் மனைவி ஏன் உன் அம்மா மாதிரி சமைக்க வேண்டும்? நீ தான் உன் அம்மா சமையலை 30 வருடங்களாக சாப்பிட்டிருக்கிறாய். அப்படியானால், நீ தானே உன் அம்மா மாதிரி சமைக்க வேண்டும். அந்த பெண் அவளுடைய அம்மா மாதிரி தான் சமைப்பாள். உன் அம்மா மாதிரி அவள் எப்படி சமைப்பாள்?” என்று கூறினார்.

இந்த கருத்து பெண்களின் தனித்துவத்தையும், குடும்ப வாழ்க்கையில் சமத்துவத்தின் அவசியத்தையும் சுட்டிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த கருத்தை ஆதரித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், பலர் இது ஒரு முக்கியமான உண்மை என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement