• Jun 14 2026

2062-ல தான் நல்லா இருப்பேன்.! கணக்கு போட்ட திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு நகைச்சுவையான பதிவு வேகமாக வைரலாகி வருகிறது.

திரிஷா பொதுவாக இரவு நேரங்களில் தூக்கம் வராது என்றும் அந்த நேரத்தில் அதிக சுறுசுறுப்பாக இருப்பதாகவும் முன்பே கூறியிருந்தார். 

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் எடுக்கப்பட்டபோதும் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தூக்கமின்மை குறித்து திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,


"ஒரு மணிநேரம் தூக்கத்தை இழந்தால் அதை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படியென்றால் கணக்குப்படி 2062-ல்தான் நான் நன்றாக உணர்வேன்!"என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது சித்தார்த்துடன் நான்காவது முறையாக தெலுங்கு படத்தில் இணைய உள்ள திரிஷா, அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இயல்பான நகைச்சுவை உணர்வுடன் இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement