• Apr 16 2026

எப்படியிருந்த ஷபானா இப்படி மாறிட்டாங்களே.! இன்ஸ்டாவை அதிரவைத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்

shali / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகை ஷபானா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது வெளியிட்ட போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.


செம்பருத்தி என்ற சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. குடும்பக் கதையம்சத்துடன் வந்த இந்த தொடர், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலில் நடித்த ஷபானா, தனது இயல்பான நடிப்பால் விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சீரியலில் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் ஷபானா மிகவும் ஆக்டிவாக இருப்பவர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தினசரி வாழ்க்கை தருணங்களை பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில், சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஷபானா அழகிய புடவை அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் காட்சியளித்துள்ளார். எளிமையான மேக்கப் மற்றும் புன்னகை அனைத்தும் சேர்ந்து அவரை மேலும் அழகாக காட்டுகின்றன.

Advertisement

Advertisement