தமிழ்த் திரை உலகில் கவிஞரும் நடிகருமான சினேகன், நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதுவும் பெரியார்களின் ஆசிர்வாதத்துடன் கமலஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழித்து வருகின்றனர். பல வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் இருந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. தாங்கள் பெற்றோர் ஆனதை இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்து, ரசிகர்களின் வாழ்த்துகளையும் பெற்றனர்.

இதை அடுத்து தங்களுடைய குழந்தைகளுக்கு கமலஹாசன் பெயர் வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர் இரட்டை பெண் குழந்தைகளுக்கு “கவிதை” மற்றும் “காதல்” என பெயர்களை வைத்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் சினேகன் குடும்பம் கோயிலுக்கு சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதில் பார்ப்பதற்கு இந்த குடும்பம் அவ்வளவு க்யூட்டா இருக்கு.. குழந்தைகள் எவ்வளவு க்யூட்டா இருக்காங்க.. என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!