• Apr 26 2025

இயக்குநர் பிரதீப்பின் கதையை மறுத்த நடிகர் விஜய்.. வெளியான தகவல் இதோ...!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணியில் உள்ள பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். அதனைத் தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தார். இவரது லவ் டுடே படம் திரையரங்குகளில் சிறந்த  வரவேற்பை பெற்றிருந்தது.

அந்தவகையில் பிரதீப் தற்பொழுது டிராகன் என்ற படத்தில் நடித்து வருவதுடன் அந்தப் படத்தினை இந்த மாதம்  வெளியிடப்போவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. பிரதீப் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.


அதில் பிரதீப், கோமாளி படத்தின் பின்னர் தளபதி விஜயை வைத்து படம் எடுப்பதற்காக கதை கூறினேன் ஆனால் அப்படத்தை விஜய் வேண்டாம் எனக் கூறிவிட்டார் என மிகவும் வருத்தமாக தெரிவித்திருந்தார். மேலும் விஜய்க்கு கூறிய கதையில் பிரதீப் தானே நடிகராக நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் பிரதீப்பின் ரசிகர்களுக்கு சந்தோசத்தைக்  கொடுத்துள்ளது.


Advertisement

Advertisement