• Jun 20 2025

குபேரா படம் மக்களிடம் எடுபட்டதா.? ரசிகர்களின் நேரடி ரிவ்யூ இதோ.!

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த படமான 'குபேரா', இன்று (ஜூன் 20, 2025) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


‘குபேரா’ என்பது ஒரு குடும்ப பின்னணி ததும்பும் கதையாக்கம். ஒருவரின் ஏழ்மை, அவருக்குள் இருக்கும் தியாகம் என்பவற்றைத் தாண்டி நம் சமூகத்தில் பணம் மற்றும் அதிகாரத்தின் தாக்கங்களை கூறும் முயற்சியாகவே ‘குபேரா’ அமைந்துள்ளது.

அந்தவகையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள், "படத்தின் ஆரம்பம் மெதுவாக நகர்கிறது என்றாலும், இரண்டாவது பாதியில் கதை முற்றிலும் வேகத்தைப் பிடிக்கிறது. சேகர் கம்முலா தனது ஸ்டைலான இயக்கத்துடன், ஒரு ஆழமான சமூகக் கருத்தை விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்." என்றனர்.


தனுஷ் தனது மாறுபட்ட நடிப்பால், ‘குபேரா’ திரைப்படத்தில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் பார்வையையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் காணப்படும் மனநிலை மாற்றங்கள், நம்பிக்கைகள் அனைத்தையும் மிக நுட்பமாகவும் இயல்பாகவும் காட்டியுள்ளார்.

மற்றொரு பக்கம், தெலுங்கு சினிமாவின் மூத்த நாயகன் நாகர்ஜுனா, அவருடைய கதாபாத்திரத்தில் உரிய கம்பீரத்துடன் நடித்திருக்கிறார். அவருடைய வேடம் இந்தப் படத்தில் முக்கிய திருப்புமுனைகளை வழங்குகிறது. குறிப்பாக, அவருக்கும் தனுஷுக்கும் இடையிலான காட்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.

படம் வெளியாகியதும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் படம் எதிர்பார்த்ததை விட மாறுபட்ட கோணத்தில் சென்றுவிட்டதாகச் சொல்ல, மற்றவர்கள் படத்தின் பல அம்சங்களை புகழ்ந்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement