• Apr 15 2026

ஓடிடியில் செம ஹிட்.. வெற்றியைக் கொண்டாடிய ‘மேட் இன் கொரியா’ படக்குழு.! போட்டோஸ் இதோ

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா மோகன். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் அவர், சமீபத்தில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் மூலம் ஓடிடி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளார்.


Netflix தளத்தில் நேரடியாக வெளியான இந்த படம், திரையரங்குகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்தது. ரா.கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்த படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் மார்ச் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண், கொரிய கலாசாரத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள், புதிய அனுபவங்கள், மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு படம் நகர்கிறது. இந்த தனித்துவமான கதைக்களம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


குறிப்பாக,பிரியங்கா மோகன் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தை உயிரோட்டமாக்கியுள்ளார். ஒரு சாதாரண கிராமப் பெண்ணின் கனவுகளும், அதை அடைய மேற்கொள்ளும் முயற்சிகளும் மிகவும் உணர்ச்சிவசப்படுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதனால், படம் ஓடிடி தளத்தில் வெளியாகிய சில நாட்களிலேயே நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை முன்னிட்டு, Netflix நிறுவனம் சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பிரியங்கா மோகன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அவருடன் இயக்குநர் Ra. கார்த்திக் மற்றும் படக்குழுவினர், நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

Advertisement

Advertisement