• May 16 2026

அடேங்கப்பா.!! அஸ்வத் மாரிமுத்து சொன்ன கதையால் சாப்பாட்டைக் கூட மறந்த ரஜினிகாந்த்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

“டிராகன்” படத்தின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்திருந்த “தலைவர் 173” கதையைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.


அவரது கூறுகையில், இந்தக் கதை கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக திட்டமிடப்பட்டிருந்தது. கதை முழுவதையும் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை ரஜினிகாந்த் ஆர்வத்துடன் கேட்டாராம். குறிப்பாக, கதையின் இடைவேளைக் காட்சி அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அதனால் மதிய உணவைக் கூட தவிர்த்து தொடர்ந்து கேட்டு இருந்ததாகவும் அஸ்வத் தெரிவித்துள்ளார். இது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், அந்தக் கதையை “extraordinary” என ரஜினிகாந்த் பாராட்டியிருந்தாலும், சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்தக் கதை மீது தனக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய அஸ்வத் மாரிமுத்து, எதிர்காலத்தில் இதையே ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஆகியோரில் ஒருவருடன் கண்டிப்பாக திரைப்படமாக்குவேன் என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில், “தலைவர் 173” திரைப்படத்தை தற்போது சிபிச்சக்கரவர்த்தி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement