• Apr 15 2026

ஆல்-டைம் கிளாசிக்.! பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் துணிவை துரத்தி பிடித்த கில்லி! ரீ-ரிலீஸ் வசூல் இதோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் கலாசாரம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு நட்சத்திரப் படங்கள் பிப்ரவரி 20ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளை அடைந்தன. தளபதி விஜய் நடித்த கில்லி மற்றும் தல அஜித் குமார் நடித்த துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதால், ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவியது.


2004ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி, விஜய்யின் கரியரில் முக்கிய மைல்கல்லாக அமைந்த படம். இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆக்‌ஷன், காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வு என அனைத்து அம்சங்களும் இணைந்த இந்த படம் வெளியான காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியதும், பலரும் அதை திரையரங்கில் மீண்டும் பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர்.


மற்றொரு பக்கம், 2023ஆம் ஆண்டு இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு, அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற படம். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த ஆக்ஷன் திரில்லரில், மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இந்த இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள தகவல்களின் படி, கில்லி ரீ-ரிலீஸ் முதல் நாளில் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு பக்கம், துணிவு ரீ-ரிலீஸ் முதல் நாளில் சுமார் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் முதல் நாள் வசூலில் கில்லி முன்னிலை பெற்றுள்ளதாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement