• May 18 2026

தயாரிப்பாளர்களின் கடைசி நம்பிக்கை உடைந்ததா? கே. ராஜன் மறைவால் அதிர்ச்சியில் முதலமைச்சர்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

திரைத்துறையின் மூத்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் மற்றும் விநியோகிப்பாளராகப் பல தசாப்தங்களாக செயல்பட்டு வந்த கே. ராஜன் அவர்களின் மறைவு செய்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கே. ராஜன் அவர்களின் மறைவு செய்தி தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார். திரைத்துறையின் வளர்ச்சிக்காகவும், குறிப்பாக சிறு படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தியவர் அவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவின் போக்கு குறித்து நேர்மையான விமர்சனங்களையும், தொழில்துறையின் சவால்களையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர் கே. ராஜன் என்றும் அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றும் மறக்க முடியாதவை எனவும், அவை வரலாற்றில் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் மற்றும் முழு தமிழ் திரைப்படத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், மன ஆறுதலையும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று எனவும் அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement