• Jul 17 2025

நடிகர் சரத் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து...! Dude படக்குழுவின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

Roshika / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான R. சரத் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரை மகிழ்விப்பதற்காக ‘Dude’ படக்குழு ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு தனது அன்பும் மரியாதையும் தெரிவித்துள்ளது. கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் " Dude"  திரைப்படத்தில், ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மமிதா பைஜு, விவேக் பிரசன்னா, புகழ், கோவை சரளா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.


இந்த திரைப்படத்தில் சரத் குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சக்திவாய்ந்த நடிப்பும், தனிச்சிறப்பும், இத்திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதியான பங்களிப்பாக இருக்கும் என படக்குழு எதிர்பார்க்கிறது. மேலும் சரத் குமாரின் பிறந்த நாளான ஜூலை 14-ந் தேதியை முன்னிட்டு,"Dude" படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் சரத் குமாரின் மென்மையான தோற்றத்தை   மிக அழகாக  வெளிப்படுத்தி உள்ளார்.  

மேலும் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு  சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ‘ட்யூட்’ திரைப்படம்  காதல் கலந்த த்ரில்லர் வகையில் உருவாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement