• Apr 16 2026

பல ஆண்டுகளுக்கு பின் நல்ல செய்தி.! விரைவில் ரிலீஸாகும் ‘துருவ நட்சத்திரம்’..

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தனது தனித்துவமான நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு மற்றும் முழுமையான அர்ப்பணிப்புக்காக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். விக்ரமின் திரைப்படங்களில், மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய படங்களில் ஒன்று ‘துருவ நட்சத்திரம்’. 

பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வந்தது.


‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக, கவுதம் மேனன் – விக்ரம் கூட்டணி என்பதால், இந்த படம் ஒரு ஸ்டைலிஷ் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். படத்தின் டீசர் மற்றும் சில காட்சிகள் வெளியான போதே, விக்ரமின் மாறுபட்ட லுக் மற்றும் கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இதுகுறித்து பல்வேறு வதந்திகளும் பரவின. இந்நிலையில், தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தாமதத்திற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,“நிதிச் சிக்கல்கள் காரணமாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்சனைகளை சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், “படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புகிறேன்.” எனவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, விக்ரம் ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த இந்த படம், இறுதியாக திரையரங்குகளை அடையப் போகிறது என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement