திரிஷ்யம் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் இந்தியத் திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. குடும்பம், உணர்ச்சி மற்றும் த்ரில்லர் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடர், ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக மோகன்லால் நடித்த ஜார்ஜ்குட்டி கதாபாத்திரம், மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட திரிஷ்யம் 3 திரைப்படம் வரும் மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மூன்றாவது பாகம் எப்படி கதை நகரும் என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
இந்நிலையில், “திரிஷ்யம் 3” படத்தின் டீசர் வெளியீட்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் இரண்டு பாகங்களைப் போலவே இந்தப் படமும் சஸ்பென்ஸ் மற்றும் திருப்பங்களால் நிரம்பியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் வலுவான நடிப்பும், கதையின் விறுவிறுப்பும் இணைந்து “திரிஷ்யம் 3” திரைப்படத்தை மேலும் ஒரு பெரிய வெற்றியாக மாற்றும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!