• Apr 19 2026

ஜெனியை மாலினியாக நினைத்து கொஞ்சிய செழியன்! எழில் சொன்ன அட்வைஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரூம்குள் செல்லும் போதே இன்டைக்கு ஜெனி என்ன பண்ணுவாளோ என பயந்து கொண்டு செல்கிறார். அதன்படியே அவர் மீண்டும் மாலினியின் கதையை எடுக்குறார். என்ன விட மாலினி ரொம்ப அழகா என கேட்க, நீ மட்டும் தான் எனக்கு எப்பவும் அழகு. அவ நம்பர் கூட இல்லை எல்லாம் பிளாக் பண்ணிட்டேன் என சொல்ல ஜெனி ஆறுதல் அடைகிறார். 

அந்த நேரத்தில் சரி நீ தூங்கு மாலினி என நெத்தியில் முத்தம் கொடுத்து விட்டு திரும்ப, மாலினியின் பெயரை சொன்னதை யோசிக்கிறார். இதை தொடர்ந்து உனக்கு அவள மறக்க முடியலையா என அழுகிறார். ஆனாலும் இப்போ அவள பத்தி பேசின படியா தான் அவ பெயர் வந்துட்டு என அவரை சமாதானம் செய்து தூங்க வைக்கிறார்.


அதன்பிறகு, நைட் செழியனின் கையை ஜெனி பிடித்துக் கொண்டு தூங்குகிறார். பிறகு செழியன் தூக்கம் வராமல் கீழே இறங்கி வர, அங்கு எழில் ஸ்ரிப்ட் எழுதிக் கொண்டு இருக்கிறார். அவரிடம் நடந்தவற்றை சொல்ல, எழில் கொஞ்ச நாளுக்கு சமாளி, அவங்களுக்கு நம்பிக்கை வரும் அப்போ எல்லாம் சரியாகும் என அட்வைஸ் பண்ணுகிறார்.

மறுப்பக்கம் பழனி வீட்டில் பாக்கியாவுக்கு சாப்பாடு காசு கொடுக்க பழனி செல்ல, அவருடன் அவரது மருமகனும் இனியாவை பாக்கலாம் என கிளம்பி செல்கிறார்.

அங்கு சென்றவர் பாக்கியாவுக்கு காசை கொடுக்க, பாக்கியா வாங்க மறுத்து அதனை தனது பிறந்த நாள் பரிசாக வைக்க சொல்கிறார். ஆனாலும் பழனி கொடுக்க அன்புக்கு விலை பேசாதைங்க சார் என பாக்கியா சொல்ல, அப்படியே ஷாக் ஆகி நிற்கிறார் பழனி. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement