• May 15 2026

புகைப்படங்களை தவறான கோணத்தில் பயன்படுத்துறார்கள்... 'காந்தாரா' நடிகைகள் ஆதங்கம்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பொது நிகழ்ச்சிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து மீண்டும் ஒரு முக்கியமான விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக திரைப்பட நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் எடுக்கப்படுவது குறித்து நடிகைகள் திறந்த மனதுடன் தற்பொழுது பேசியுள்ளனர்.

காந்தாரா திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற நடிகை சப்தமி கவுடா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,பொது நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தவறான கோணங்களில் எடுக்கப்படுவதாக கூறியுள்ளார். 


அதேபோல் நடிகை ருக்மணி வசந்த் அவர்களும் இதே கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இவர்களின் பதிவுகள், பெண்களின் தனியுரிமை மற்றும் மரியாதை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளன.

இரு நடிகைகளின் இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். பல பெண்கள் தாங்களும் இதேபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.


Advertisement

Advertisement