• May 19 2025

இறுதியாக கேப்டனுக்கு கிடைத்த அங்கீகாரம்! இதே இடத்தில பெருமை படுத்தப்படும் சிரஞ்சீவி!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர்களுக்கு பல விருதுகள் வழங்கப்பட்டாலும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷன் விருது கிடைப்பது மிகப்பெரிய ஒரு விடயம் ஆகும். அவ்வாறே இந்த வருடத்திற்கான பத்மா விருந்தானது தற்போது வழங்கப்பட்டுள்ளது.


தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் விஜய காந்த் ஆவார். இவர் சினிமாவில் மட்டும் அரசியல் பேசாமல் அரசியல் கட்சி ஆரம்பித்து மக்கள் சேவையிலும் ஈடுபட்டார். இவர் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து இருந்தாலும் தற்போது இவர் மரணமடைந்து விட்டார்.


இருக்கும் போது கிடைக்காத அங்கீகாரம் தற்சமயம் விஜய்காந்த்திற்கு கிடைத்துள்ளது.விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார். இதே  விழாவில் முன்னணி தெலுங்கு நடிகரான சிரஞ்சீவிக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement