• Apr 16 2026

ராம் சரண் – உபாசனா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததை திருவிழாவாக கொண்டாடும் ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர் ராம் சரண் மற்றும் அவரது வாழ்க்கை துணை உபாசனா தம்பதிகளுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நேற்று நடந்துள்ளது. அதாவது, தம்பதிகளுக்கு ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ள தகவல் வெளியாகி, திரையுலக ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சி அலையை உருவாக்கியுள்ளது. 


தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, ஹிந்தி, கன்னடா மற்றும் மலையாள திரையுலகத்திலும் ராம் சரண் மிகவும் பிரபலமானவர். பல ஹிட் படங்களில் நடித்த இவர், திரை ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். அதே போல், அவரது குடும்ப வாழ்க்கையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது, ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்த செய்தியால், சமூக வலைத்தளங்கள் பரபரப்பாகி, அனைத்து ஊடகங்களிலும் ஹெட்லைன்களில் முதன்மை இடம் பெற்றுள்ளது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ராம் சரணின் தந்தை, தெலுங்கு சினிமாவின் அற்புத நடிகர் சிரஞ்சீவி இதை தனது மனதில் நீண்ட காலமாக வைத்திருந்த ஆசையை நிறைவேற்றியது என்று கூறியுள்ளார். இந்நிலையில், குழந்தை பிறந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் அப்பலோ மருத்துவமனை வெளியே பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடியுள்ளனர். இத்தகவல், தற்பொழுது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement