• May 16 2026

"3 இடியட்ஸ்" பார்ட் 2 வருகிறதா? அமீர் கானின் அதிரடி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2009ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதல் பாகம் இளைஞர்களின் கனவுகள் மற்றும் வாழ்க்கை நோக்கங்களை பேசும் விதமாகவும் அமைந்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமீர்கான் உடன் ஆர். மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழில் நண்பன் என்ற பெயரில் ஷங்கர் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது. இதில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்திருந்தனர்.

இப்போது, முதல் பாகம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதிக் கொண்டிருப்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். முதல் பாகத்திலிருந்து 10 ஆண்டுகள் கழித்து நடைபெறும் கதையாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement