விஜய் டீவியின் ‘குக் வித் கோமாளி’ சீசன் 6, வழக்கம்போல சிரிப்பு, கிச்சன் கலாட்டா மற்றும் கோமாளிகளின் காமெடிக் காட்சி ஆகியவற்றால் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகின்றது. ஆனால் சமீபத்தில் வெளியான 6வது எபிசொட் புரொமோ பலருக்குள் ஒரு வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், கடந்த 5 சீசன்களிலும் கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்களிடையே தனி இடம் பிடித்த சௌந்தர்யா, இந்த வார எபிசொட்டில் பங்கேற்காதது ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
பொதுவாகவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் ஒவ்வொரு வாரமும் மிகுந்த ஆற்றல் மற்றும் காமெடி கலாட்டாவுடன் ரசிகர்களைக் கவர்கிறார்கள். அந்த வரிசையில், சௌந்தர்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
இந்த வாரம் சௌந்தர்யா நிகழ்ச்சியில் இல்லாததைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் 'ஏன் சௌந்தர்யா இல்லை?' என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்தக் கேள்வி, ரசிகர்கள் சௌந்தர்யாவை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.
இவ்வளவு நாட்களாக ஒளிபரப்பான எபிசொட்டில் மற்றொரு கோமாளியான சுனிதா, “நாங்க தான் சீனியர் கோமாளிகள், நாங்க தான் கெத்து” என்று கூறியதற்குப் பிறகு, சிலர் அதை சௌந்தர்யாவைக் heart பண்ணத் தான் இப்படி கதைக்கிறார் என்றும் கமெண்ட்ஸில் தெரிவித்திருந்தனர்.
மேலும் சௌந்தர்யா நிகழ்ச்சியில் யாருடனும் அதிகமாகப் பேசாமல், விலகி இருப்பது போன்ற காணொளிகள் இணையத்தில் பரவிய நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் சௌந்தர்யா தோன்றாதது, சுனிதாவின் பேச்சால் அவர் வரவே இல்லை என்கின்ற எண்ணத்தை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது. இது நிஜம் தானா? எனப் பலரும் கமெண்ட்ஸில் கேட்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் டீவி தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதுதான் ரசிகர்களுக்குள் அதிகமான எதிர்பார்ப்பு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!