• Apr 07 2026

திருமணத்திற்குப் பிறகு சமந்தா இப்டி மாறிட்டாங்களே.! வெளியான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சமந்தா ரூத் பிரபு, தனது திறமையான நடிப்புடன் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் தொடர்ந்து செய்திகளின் தலைப்பாகி வருகின்றார். சமந்தா, பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோவால், அவரின் ரசிகர்கள் மீண்டும் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர்.


சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ்த் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2017ஆம் ஆண்டு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்றாகக் கருதப்பட்டார். 

ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு, இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து கொண்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.


பிரிவுக்குப் பிறகு, சமந்தா தனக்கு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டார். கடந்த வருடம், ராஜ் நிடிமோரு உடன் திருமணம் செய்து கொண்ட அவர், சமூக வலைத்தளங்களில் தனது புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு, சமந்தா தனது ஆரோக்கியத்திற்கும் உடல் பராமரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு workout வீடியோ, அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

இந்த வீடியோவில், சமந்தா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்த ஒர்க் அவுட் வீடியோ, சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகி ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement